என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மத்திய குழு ஆய்வு
நீங்கள் தேடியது "மத்திய குழு ஆய்வு"
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழு இன்று மாலை பார்வையிட்டது. #GajaCyclone #CentralCommittee
புதுக்கோட்டை:
கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
கடந்த 10 நாட்கள் ஆகியும் மீளாத்துயரில் தவித்து வரும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
இதற்கிடையே, புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். அப்போது புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவியை கோரினார்.
இதையடுத்து டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு நேற்று இரவு சென்னை வந்தது. அவர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழுவினர் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து பின்னர் காரில் புதுக்கோட்டை சென்றனர்.
புதுக்கோட்டையில் குளத்தூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டது.
அப்போது துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர், கண்காணிப்பு அலுவலர்கள் சுனில் பாலிவால், சம்பு கல்லோலிகர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர். #GajaCyclone #CentralCommittee
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தலைமை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கவும், அணையை கண்காணிக்க 3 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய தலைமை கண்காணிப்பு குழு அமைக்கவும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
மேலும் இந்த குழுவுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக் குழுவும் அமைக்கப்பட்டது. பருவமழை காலங்களில் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து, நீர் கசிவு, நீர் வெளியேற்றம், பாதுகாப்பு குறித்து துணைக்குழு ஆய்வு செய்து மூவர் குழுவுக்கு அறிக்கை அனுப்பும்.
கடந்த 15-ந் தேதி மத்திய துணைக்குழுவினர் அணையை பார்வையிட்டு 6 மதகுகளின் கதவுகளை இயக்கிப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து இன்று (21-ந் தேதி) தலைமை கண்காணிப்பு குழுவின் தலைவர் குல்ஷன்ராஜ், தமிழக அரசின் பிரதிநிதி பிரபாகரன், கேரள அரசின் பிரதிநிதி டிங்கு பிஸ்வால் ஆகியோர் ஆய்வுக்கு வருவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது இந்த ஆய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 2-வது வாரத்தில் ஆய்வு நடைபெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

×

X